இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சி ஆலயத்தில் திருடியவர் கைது!

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
Share

வடமராட்சி துன்னாலை ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட இலட்சக் கணக்கான பெறுமதியான பொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆலயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கதவு உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள் என்பன திருடப்பட்டு இருந்தன.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் 22 வயது இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...