ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும், விசேட வேலைத்திட்டங்கள் பல செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான செயலணியானது இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
வுவுனியா மாவட்ட மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் குறித்து நேற்று அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவ்விடயங்களை யோசனைகளாகத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிப்பதே தமது எதிர்பார்ப்பு என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment