இலங்கைசெய்திகள்

ஆண் ஆசிரியர்களை விடவும் மூன்று மடங்கு அதிகமாக பெண் ஆசிரியர்கள்

Share
tamilni 342 scaled
Share

ஆண் ஆசிரியர்களை விடவும் மூன்று மடங்கு அதிகமாக பெண் ஆசிரியர்கள்

இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 396 தேசியப் பாடசாலைகளும் 9730 மாகாணப் பாடசாலைகள் என, மொத்தம் 10126 பாடசாலைகள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 236,738.

அவர்களில் 56,817 ஆண் ஆசிரியர்கள் மற்றும் 179,921 பெண் ஆசிரியர்கள். இது மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில் 76 சதவீதமாகும்.

2022 ஆம் ஆண்டிற்கான கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பாடசாலை அமைப்பின் சமீபத்திய புள்ளிவிபரத் தரவு அறிக்கையின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

அத்துடன், 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1473 பாடசாலைகளும், 4000 ற்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட 34 பாடசாலைகளும் உள்ளதாகவும் தரவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...