மொட்டுக்கே ஆதரவு! – மைத்திரி அறிவிப்பு
மைத்திரி: தற்போதைய அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறி புதிய கூட்டணி அமைக்கவில்லை எனவும் தொடர்ந்தும் மொட்டு தலைமையிலான கூட்டணி அரசுக்கே ஆதரவு வழங்கவுள்ளது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியில் 70ஆம் நிறைவையொட்டி பொலநறுவையில் இடம்பெற்ற குருதிக்கொடை நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், அரசிலிருந்து விலகுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. அவ்வாறு வெளியிடும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment