ரணிலின் முடிவால் பதவி விலக தயாராகும் அமைச்சர்
இடைக்கால கிரிக்கெட் குழுவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீளப் பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக சர்வதேச கிரிக்கட் பேரவையில் தாக்கம் கூட ஏற்படலாம் என ஜனாதிபதி அங்கு தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி என்னால் அதைச் செய்யவே முடியாது, நீங்கள் விரும்பினால் என்னை நீக்குங்கள் என குறிப்பிட்டுள்ளர்.
பின்னர் இது தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி ஏற்பாடு செய்தார்.