இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் என்பது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கைகளிலேயே தங்கியுள்ளது.” – என்று முன்னாள் ஜனாதிபதியும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பதிலடி கொடுத்து நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.
” தேர்தல் காலங்களில் கூட்டணிகளை அமைத்துவிட்டு, அதன் பிறகு அரசுக்குள் மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தால் என்ன நடக்கும் என்ற பாடத்தை வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த அரசிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருக்கலாம். அதில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் அங்கம் வகிக்கின்றனர். எனவே, எம்மால்தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் பாதுகாக்கப்படுகின்றது.
கூட்டணி ஒற்றுமையை காத்து, நட்புடன் நகரவே நாம் விரும்புகின்றோம். எம்மை தாக்க முற்பட்டால், அவர்களின் வழியில் அல்லாமல் வேறு வழியில் பதிலடி கொடுக்க நாமும் தயார்.” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
#SriLankaNews
3 Comments