முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதி சென்ற லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பவுள்ளன.
இவ்வாறு வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நீதியமைச்சர் அலி சப்ரி,
அநுராபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றது எனக் கூறப்படும் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்படத்தக்கவை. அவை நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க உயிர்நீதிமன்றில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.
இவை தொடர்பில் சி.ஐ.டியினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகாரசபை ஆகியவை விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது – என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Leave a comment