தசாப்த காலமாக பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே இவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த இவர்,
சுமார் 12,000 பேர் யுத்த முடிவின் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் சிற்சில காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பலர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலே இன்னும் சிறையில் வாடுகின்றனர். அவர்களின் விடுதலை தொடர்பில் கவனம் எடுக்குமாறு நீதி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் பேசிய அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை கட்டம் கட்டமாக முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.
‘புலிகளின் மீளெழுச்சியில் தொடர்புபட்டார்கள்’ என்று குற்றம் சுமத்தப்பட்டு கடந்த இரு வருடங்களாக 40 அல்லது 50 இளைஞர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பல தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment