parli
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற குழுக்களின் தலைமைப்பதவி எதிரணிக்கு!

Share

9 ஆவது நாடாளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்துவைக்கப்படும்.

2 ஆவது கூட்டத்தொடர் நேற்று நள்ளிரவுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு,நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு, சபைக் குழு உட்ட முக்கியமான 11 குழுக்கள் செயலிழந்துவிட்டன.

மேற்படி 11 குழுக்களில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு ( கோபா), அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்க நிதி பற்றிய குழு என்பன முக்கியத்துவம்மிக்கவை.
ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் இக்குழுக்களில் அங்கம் வகித்தாலும்,
தலைமைப்பதவியை தக்க வைத்துக்கொள்ள ஆளுங்கட்சியே முற்படும். நல்லாட்சியின்போது இந்நிலைமை மாறுபட்டது.

கோப் குழு தலைவராக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தியும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரனும் செயற்பட்டனர்.

மொட்டு ஆட்சியின்கீழ் கோப் குழுவுக்கு சரித ஹேரத், கோபா குழுவுக்கு திஸ்ஸ விதாரண, அரச கணக்குகள் பற்றிய குழுவுக்கு அநுர பிரியதர்சன யாப்பா போன்ற மொட்டு கட்சி எம்.பிக்களே நியமிக்கப்பட்டனர்.

எனினும், புதிய கூட்டத்தொடர் ஆரம்பமானதும், மேற்படி முக்கிய மூன்று குழுக்களினதும் தலைமைப்பதவிகள் எதிரணி எம்.பிக்களுக்கு வழங்கப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...