120562259 g.l.peiris
இலங்கைசெய்திகள்

சர்வதேசம் ஒருபோதும் நம்பப்போவதில்லை!

Share

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்திலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தில் நாம் இதுவரை காலம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்துமே மீறப்பட்டுள்ள நிலையில், எதிர்காலம் குறித்து இலங்கை வழங்கும் வாக்குறுதிகளை எவரும் நம்பப்போவதில்லை என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (7) விசேட கூற்றொன்றை எழுப்பி உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையின் போது எமக்கு ஆதரவாக ஏழு நாடுகள் வாக்களித்திருந்தாலும் கூட, இலங்கையின் மிக முக்கிய நட்பு நாடுகளாக கருதும் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய இரு நாடுகளும் வாக்களிப்பிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

அதேபோல் ஆசிய நாடுகள் எப்போதுமே எம்முடன் இருந்தனர். ஆனால் இம்முறை இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளும் எமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த மாற்றங்களுக்கு காரணம் என்னவென நாம் ஆராய வேண்டும்.

குறிப்பாக நாம் கம்பீரமாக கொடுக்கும் வாக்குறுதிகளை இலகுவாக மீறுகின்றமையே இதற்கு பிரதான காரணமாகும். பயங்கரவாதத்தடை சட்டத்தை மாற்றுவோம், அடிப்படை பிரச்சினைகளில் மாற்றங்களை கொண்டுவருவோம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதற்கொண்டு சகலரும் வாக்குறுதிகளை வழங்கியும், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக மீறியுள்ளோம்.

அதுமட்டுமல்ல உண்மைகளை கண்டறிய தேசிய பொறிமுறையொன்றை உருவாக்குவோம் என புதிய வாக்குறுதியும் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக மீறியுள்ள நிலையில் இப்போது எதிர்காலம் குறித்து கொடுக்கும் வாக்குறுதியை யார் ஏற்றுக்கொள்ளப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது – என்றார்.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...