இராமர் பாலமாம்… மணற்திட்டில் வழிபட்ட இந்திய தூதர்

tamilnaadi 89

இராமர் பாலமாம்… மணற்திட்டில் வழிபட்ட இந்திய தூதர்

இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா நேற்றைய தினம் (16.02.2024) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் அவர் இந்தியா – இலங்கை இடையிலான வலுவான கலாசாரப் பிணைப்பு மற்றும் பொதுவான மரபுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் ராமர் சேது பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இந்திய இலங்கை மக்களின் நல்வாழ்வு மற்றும் இந்திய இலங்கை உறவுகளுக்காகவும் அவர் பிரார்த்தனைகளில் ஈடுப்பட்டிருந்தார்.

அத்துடன் ராமர் சேது பகுதியை அடுத்து இந்திய தூதுவர் வேறு சில இடங்களுக்கும் நேற்று (16) விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version