download 19 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தீவிரமடையும் டெங்கின் தாக்கம்!

Share

தீவிரமடையும் டெங்கின் தாக்கம்!
Eastern Province

டெங்கு நோயினால் ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை  4300 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் எஸ். அருள்குமரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய் பரவல் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணமும் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்தில் இந்த வருடம் முதல் நான்கு மாதங்களிலும் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டார்கள். கடந்த மாதம் ஏப்ரல் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணம் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணம் உட்பட இரண்டு மரணங்களும்,4300ற்கும் மேற்பட்ட  டெங்கு நோயாளிகளும் இனம் காணப்பட்டுள்ளார்கள்.
அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1800க்கும் மேற்பட்ட நோயாளிகள் இனங்காணப்பட்ட நிலையில் கடந்த மாதம் மட்டும் 600 நோயாளிகள்  இணங்காடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மார்ச் மாதம் 600க்கும் மேற்பட்ட நோயாளர்களும் ஏப்ரல் மாதத்தில் 700 க்கும் மேற்பட்ட நோயாளர்களும் இனங் காணப்பட்டுள்ளதுடன்  திருகோணமலை நகரம்,உப்புவெளி மற்றும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண தொற்று நோயியல்  நிபுணர் எஸ்.அருள்குமரன் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் கிணற்றில் டெங்கு குடம்பிகளை   தடுப்பதற்காக வேண்டி  கப்பீஸ் என்று அழைக்கப்படும் மீன்கள் காணப்படுகின்றது.
 அதனை நீங்கள் உங்களுடைய பொது சுகாதார பரிசோதனைகளிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுமாறும், சீமெந்து தொட்டிகளை முற்றாக அகற்றுமாறும் கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் எஸ். அருள்குமரன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...