செய்திகள்அரசியல்இலங்கை

நெறிமுறைகளை மீறி செயற்படுகிறது அரசு! – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Share
Share

” தற்போதைய அரசு இராஜதந்திர நெறிமுறைகளையும் மீறி செயற்படுகின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல கூறியவை வருமாறு,

” வழமையாக வெளிநாட்டு தூதுவர்களை, அமைச்சர்கள் தமது அமைச்சுக்கு அழைத்தே பேச்சு நடத்துவார்கள். விளக்கம் கோருவார்கள். இதுவே இராஜதந்திர நடைமுறை. ஆனால் இந்த அரசின் அமைச்சர்களும், அதிகாரிகளும் தூதுவர்களை நாடி, தூதரகங்களுக்கே சென்று சந்திப்புகளை நடத்துகின்றனர். இது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும்.

சீன நிறுவனத்திடமிருந்து உரம் வாங்கிய விவகாரம் இராஜதந்திர நடவடிக்கை அல்ல. நிலைமை இவ்வாறிருக்கையில், இதனை இராஜதந்திர பிரச்சினையாக காண்பிப்பதற்கு அரசு முற்படுகின்றது.” – எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, சீனா என்பது எமக்கு மிக முக்கிய நாடு. தடுப்பூசி உட்பட பல வழிகளிலும் உதவிகளை செய்துள்ளது. உரத்தை மட்டும் அடிப்படையாக வைத்து உறவை கணிக்கமுடியாது. தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மாறாக தூதுவர் எமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...