செய்திகள்இலங்கை

விவசாயிகளுடனான விளையாட்டை அரசு உடன் நிறுத்த வேண்டும் – சஜித்

Share
sajith 2
Share

விவசாயிகளுடனான விளையாட்டை அரசு உடன் நிறுத்த வேண்டும் – சஜித்

நாட்டின் மொத்த பொருளாதார பொறிமுறையையும், அனைத்து மக்களது வாழ்க்கையையும் மிகப்பெரிய பேரழிவுக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் புதிய பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டு அவற்றுக்கு தவறான தீர்வைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறு எதிர்க்ட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைக்காலத்துக்குள் குறுகிய சிந்தனையுடன் கண்மூடித்தனமாக தீர்மானமொன்றை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.

அரசாங்கம் இராசயன உரத்தடை திட்டத்தை கொண்டுவந்தமை வெறும் அரசியல் திட்டமேயன்றி நடைமுறை சாத்தியமற்ற தான்தோன்றித்தனமான தீர்மானம் ஆகும்.

மரக்கறி விவசாயிகள் மற்றும் சிறு ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பெருந்தோட்டத்துறைகளான தேயிலை, தென்னை, இறப்பர் உற்பத்தியாளர்கள், பழவகை உற்பத்தியாளர்கள், சேனைப் பயிர்ச் செய்கையாளர்கள் என பல தரப்பட்டோர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி கண்டுள்ளமைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். மக்கள் நலன் இல்லாத பொது நலன் பேணாத இந்த அரசாங்கத்திடமிருந்து அதற்கு சாதகமான எந்தவொரு பதிலையும் எதிர்பார்க்க முடியாது.

அரிசி மாபியாவை நிறைவு செய்வதாக கூறி கற்பனைப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து வெறும் ஊடக கண்காட்சியில் ஈடுபட்டுக் கொண்ருக்கின்றது.

உற்பத்தித்திறனை மேம்படுத்துவதைத் தவிர விவசாய பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து மாற்றுத் திட்டங்கள் இல்லாததோடு அது குறித்து காணப்படுகின்ற சிக்கல்களை அறிந்துகொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் உயர்த்துவதை விட அரசாங்கம் தமது நண்பர்களை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

கொரோனா பேரழிவோடு போராடுகின்ற உலகின் பல்வேறு நாடுகள் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு முதலிடம் கொடுத்துள்ள நிலையில் இந்த அரசாங்கம் இந்த இரண்டையும் திட்டங்களில் இருந்து அகற்றி மண்ணில் புதைத்துள்ளது.

நாட்டின் மொத்த பொருளாதார பொறிமுறையையும், அனைத்து மக்களது வாழ்க்கையையும் மிகப்பெரிய பேரழிவுக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் புதிய பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டு அவற்றுக்கு தவறான தீர்வைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது.

எனவே நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் சார்பாக விவசாயிகள் இந்தப் பிரச்சினைகளுக்கு உணர்திறனான உடனடித் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் – என்று தெரிவித்துள்ளார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...