எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவதற்குச் சிறந்த வழிமுறை மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினுடைய விலை சூத்திரத்திரம் தான் சிறந்தது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
மங்கள சமரவீரவினுடைய விலை சூத்திரத்திரத்தை, நடைமுறைப்படுத்தியிருந்தால், இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டிருக்காது.
யாரேனும் சிறந்த விடயங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும், இன்று இரண்டு மடங்கு பணம் செலுத்தி ஒரு பை மளிகைப் பொருட்களை வாங்கக் கூடிய நிலையில் வசிப்பது மிகவும் வேதனை தரக்கூடியது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
#SrilankaNews

