இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் திறப்புவிழாவில் முதல் விமானமாக இலங்கை விமானம் தரையிறங்கியது.
இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம் குஷிநகரில் தரையிரங்கியதையடுத்து, இந்தியாவின் புதிய சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இலங்கையில் இருந்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அரச பிரதிநிதிகள் குழுவினரும் 100 பெளத்த பிக்குகள் பயணித்துள்ளனர்.
பெளத்தர்களின் புனித நகரில் திறக்கப்பட்ட சர்வதேச விமான தளத்தில், இலங்கை விமானம் முதலாவதாக தரையிறங்கியமை வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பமாகும்.
மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் வஸ்கடுவ கபிலவஸ்து புனித சின்னங்கள் சகிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஆரம்பமாகியுள்ளதாக இந்திய உயர்தானியரகம் தெரிவித்துள்ளது..
#SrilnkaNews
Leave a comment