இலங்கையை ஆக்கிரமித்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல்
நாட்டின் எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றும் நடவடிக்கையே யுக்திய என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் குழுக்களுக்கு யுக்திய நடவடிக்கை தொடர்பில் அறிவிக்கும் விஷேட செயலமர்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“நாடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த நேரத்தில், இந்த அமைச்சை நாங்கள் பொறுப்பேற்றதும் நிலைமையை அமைதிப்படுத்தும் பொறுப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது மக்கள் தங்களை காக்க முடியாத நிலை ஏற்பட்டது.
வெளிநாட்டினர் நாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் இருந்த நாட்டை அமைதிப்படுத்த நாம் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் அந்த சவாலை எங்களால் சமாளிக்க முடிந்தது. இல்லை என்றால் எரிவாயு வரிசையிலும், எரிபொருள் வரிசையிலும் மக்கள் அவதிப்பட வேண்டியிருக்கும்.
எவ்வாறாயினும், நிலைமையைக் கட்டுப்படுத்திய பின்னர், நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே நாம் எதிர்கொண்ட மிகப் பெரிய சவாலாகும்.
இந்த நிலைமை தொடர்பில் தற்போது விசேட குழுவொன்றின் ஊடாக பல மாதங்களாக விசேட ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான வேலைத்திட்டத்தை தயாரித்தோம். அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபரை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்.
அதன்படி, சுதந்திரமாக நீதி நடவடிக்கையை தொடங்கி நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினேன். பல்வேறு நபர்களின் செல்வாக்கின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்கும் மரபை மாற்றியுள்ளோம்.
துறைக்கு பொறுப்பான அமைச்சராக, நான் நேரடியாக பணியாற்றுகிறேன். அதன்படி நாடளாவிய ரீதியில் இந்த செயற்பாடுகள் வெற்றிகரமாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எனக்கும், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் இன்னொருவருக்கு தீங்கிழைக்கும் வகையில் இந்த அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்களை கவிழ்க்க சமூக ஊடகங்கள் சேறு பூசுகின்றன. அதனால் தான் இந்த ஆன்லைன் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளோம்.சமூக ஊடகங்களை தவறாக கையாளும் நபர்களுக்கு மட்டுமே இந்த மசோதா ஒரு பிரச்சினையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Comments are closed.