87778 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு மாவட்ட செயலகமே காரணம்! – SLRCS குற்றச்சாட்டு

Share

பாதுகாப்பு தரப்பினருடன் இணைத்து மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு.கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்ட இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கத்தின் வருவாயை நோக்கியே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானதினை கொண்டு மக்களுக்கு நிவாரணம், மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை ஆற்றி வருகின்றோம்.

எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இதுவரை காலமும் எந்த பிரச்சனையும் இல்லாமல் மக்களுக்கு எரிபொருளை விநியோகித்து வந்தோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புத் தரப்பினதும் கச்சேரியினதும் செயற்பாடுகளால் மக்களுக்கு உரிய முறையில் எரிபொருளை பகிர்ந்தளிக்க முடியவில்லை.

யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஊடாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் எனத் தெரிவிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் பெயர்ப் பட்டியல் கையளிக்கப்பட்டு அதனை பகிர்ந்தளிக்க முற்பட்ட போதே பிரச்சினைகள் ஏற்பட்டது.

ஐந்து நாட்களுக்கு மேலாக காத்திருக்கின்ற மக்களை விட்டுவிட்டு உடனடியாக வந்து பெருந்தொகை எரிபொருளை கேட்டதாலையே மக்களுக்கு எரிபொருளை உரிய முறையில் பகிர்ந்தளிக்க முடியவில்லை.

உண்மையில் செஞ்சிலுவைச் சங்கம் என்ற அடிப்படையில் மக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கமாகும். அதனையே நாங்கள் தொடர்ந்தும் செய்வோம். எதிர்காலத்திலும் அவ்வாறு தான் செயற்படுவோம்.

அடுத்த முறை பெற்றோல் வருமாக இருந்தால் நாங்கள் நிச்சயமாக பொதுமக்களுக்குத் தான் வழங்க முடிவு செய்திருக்கின்றோம். இந்த முடிவை நிர்வாகக்குழு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...