VideoCapture 20220723 123715
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசின் முடிவு ஆரம்பமாகிவிட்டது! – சுமந்திரன் எம்பி தெரிவிப்பு

Share

நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 1983 ஜூலைக் கலவரம் ஏற்பட்டு 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜூலை மாதத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் உறவினர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும்போது நேற்றைய தினம் காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் பதிவாகியிருக்கிறது.

போராட்டகாரர்கள் நேற்றைய தினத்தில் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பண்டாரநாயக்க சிலையை சுற்றி 50 மீற்றர் தூரத்திற்கு ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரை போகக்கூடாது என்பதே நீதிமன்ற உத்தரவு. நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை. பண்டாரநாயக்க சிலைக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இடையே அதிகதூரம் உள்ளது.

ஜனாதிபதி செயலகத்தை மீள கையளிப்பதாக போராட்டகாரர்கள் சொன்ன பிறகு இந்த தாக்குதல் அரச படையினரால் இருட்டில் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச சமூகம் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது. இவ்வாறான சம்பவம் இனிமேல் நடந்தால் உங்களுக்கு உதவமெட்டோமென ஐனாதிபதிக்கு முக்கிய நாட்டு பிரதிநிதி முகத்துக்கு நேரே சொன்னார்.

கடந்த மே 9 தாக்குதல் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய தாக்குதல் அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்டது. மே 9 தாக்குதலை கண்டித்த ரணில் விக்கிரமசிங்க ஏன் இதனை கண்டிக்கவில்லை.

ஒருசில மணிநேரத்திற்குள் நிறைவேற்றதிகாரம் ரணிலை மாற்றிவிட்டது. நேற்றைய தாக்குதல் நாட்டை பின்னடைய செய்துவிட்டது. பாசிச அரசின் முடிவு ஆரம்பமாகிவிட்டது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...