எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த 22ம் திகதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கைது செய்யப்பட்ட 12 பேரில் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகு அரசுடைமையாக்கப்பட்டது.
#world