01 COVID
இலங்கைசெய்திகள்

நவம்பரில் நாடு வழமைக்கு திரும்பும் –சன்ன ஜெயசுமன

Share

நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது. அதன்படி நவம்பர் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக வழமைக்கு திரும்பும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு மகத்தான சாதனை.

அதேவேளை தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதனால் நவம்பர் மாதத்தின் 2ஆவது வாரத்தில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பமுடியும்.

ஆயினும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தற்போதைய கொரோனா பரவல் குறைவடையும் சூழலை தொடர்ந்து பராமரித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...