அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு வங்குரோத்து நிலையில்! – ராஜபக்சக்களே காரணம் என்கிறார் லக்ஸ்மன்

Share
lakshman kiriella
Share

” இலங்கையை இதுவரை ஆண்ட எந்தவொரு அரசும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசெல்லவில்லை. எனினும், இந்த அரசு நாட்டை வங்குரோத்து அடைய வைத்துள்ளது. எனவே, பதவி விலகுவதைதவிர வேறு வழியில்லை.”

இவ்வாறு எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டை வங்குரோத்து அடைய வைத்த ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை என நீதி அமைச்சரிடம் கேட்க விரும்புகின்றேன். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரால் இன்று வெளியில் தலைகாட்ட முடியவில்லை. நாடாளுமன்றத்துக்கு முன்பாகவும் கிராமம் ஒன்று உருவாகியுள்ளது. எம்மையும், எமது உறவினர்கள் திட்ட ஆரம்பித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் கதைக்கின்றீர்கள், என்னதான் தீர்வு என அவர்கள் கேட்கின்றனர். இதற்கு என்ன பதிலை வழங்குவது?

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கினால், அப்பணத்தை கொள்ளை அடிக்க முடியாது என்பதால்தான் ஆட்சியாளர்கள் ஐஎம்எப்பை நாடவில்லை. தற்போது தலைக்கு மேல் வெள்ளம் வந்துள்ள நிலையில்தான் அங்கு சென்றுள்ளனர்.” – என்றும் கிரியல்ல குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...