பண்டிகை காலங்களைக் கருத்திற்கொண்டு, பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் முடக்கத்தை அறிவித்தால் ஆச்சரியமில்லை என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டின் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, கடுமையான விதிமுறைகளை விதிக்கலாமா அல்லது முடக்கத்துக்குச் செல்லலாமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் நாட்டை மூடும் சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க அனைத்து விடயங்களும், அமைதியாகவும் பொறுப்புடனும் கையாளப்படுவதை அனைத்து தரப்பினரும் உறுதிப்படுத்துவது முக்கியமானது.
கொரோனா பரவல் தீவிரமடைந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment