sumanthiran 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த துரத்தப்படுவார் என தெரிந்த பின்பே காங்கிரஸ் விலகியது! – சுமந்திரன் எம்.பி காட்டம்

Share

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ச துரத்தப்பட போகிறார் என தெரியவந்த பின்னரே அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மற்றைய கட்சிகளை நான் பெரிதும் விமர்சிப்பது கிடையாது. ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ச துரத்தப்பட போகிறார் என தெரியவந்த பின்னரே அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட போது அமைச்சுப் பதவிக்காக ஒட்டிக்கொண்டிருந்தவர்களே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் .மஹிந்த ராஜபக்ச பலமாக இருந்திருந்தால் ஜீவன் தொண்டமானின் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்திருக்குமா என்பது தொடர்பில் எனக்கு பாரிய சந்தேகம் உள்ளது.

அது அவர்களது அரசியல். அதிகாரத்துக்கு பின்னாலும் சலுகைக்கு பின்னாலும் செல்வது சிலருக்கு வாடிக்கையாகிப் போய்விட்டது. மனோ கணேசன் இந்த விடயத்திலே மிகவும் பொறுப்பானவராக ஒரு கொள்கைப் பிடிப்போடு அதிகாரத்துக்கு பின்னாலோ அமைச்சுப் பதவிக்கு பின்னாலோ சலுகைக்காகவோ சென்றவர் அல்ல.

இந்த விடயத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை நிலைப்பாட்டோடு பயணிக்க கூடிய ஒருவராக அவரை நாங்கள் அறிகிறோம். ஒரு சிலர் அங்கேயும் இங்கேயுமாக இருக்கிறார்கள் இது பாரிய நுணுக்கமான கலை என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...