செய்திகள்அரசியல்இலங்கை

பட்ஜெட் கூட்டத்தொடரிற்குப் பின்னர் இடம்பெறவுள்ள மாற்றம்!

gl7
Share

வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் 2022 ஜனவரி மாதமே நாடாளுமன்றம் மீண்டும் கூடும். அவ்வாறு கூடும்போது புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்த குழுவின் பணிகள் முடிவடைந்த பின்னர், சட்டமூலம் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்படும். அதன்பின்னரே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். இவ்வருடத்துக்குள் அப்பணிகள் நிறைவுபெறும்.

அதன்பின்னர் ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி முதல்வாரத்தில் இருந்து புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும்.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான தினேஷ் குணவர்தன குழுவின் அறிக்கையும் ஜனவரியில் சபையில் முன்வைக்கப்படும். புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கு இதுவும் பக்கபலமாக அமையும்.”- என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...