தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர்!!
தனியார் வகுப்புக்களை தடை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றிய தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பிரத்தியோக கல்வி நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் (2023.06.09) ஆம் திகதி நடைபெற்ற பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக தனியார் கல்வி நிறுவனங்களிலும் பிரத்தியேக் கல்வி வகுப்புக்களிலும் வாரத்தில் ஏழு நாட்களும் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் பிள்ளைகளிற்கும் சமூகத்திற்கும் ஏற்படும் சாதக, பாதக நிலைமைகள் பற்றி கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களிலும் தனியார் கல்வி நிறுவனங்களும் பிரத்தியோ வகுப்புக்களும் தரம் 9 வரையான மாணவர்களிற்கு வகுப்புக்களை நடாத்துவதனை தவிர்த்தல் எனும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனை ஏற்று யூலை மாதம் 02 ஆம் திகதியிலிருந்து அதனை நடைமுறைப்படுத்தி ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தனியார் கல்வி நிறுவன நிர்வாகத்திற்கும் பிரத்தியோ வகுப்புக்களை நடாத்துபவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறித்த விடயத்தில் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒத்துழைத்த அனைத்து பெற்றோர்களிற்கும் எனது நன்றியினை தெரிவித்து நடைமுறையை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமென அனைத்து தரப்பினரையும் அன்போடு வேண்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
Leave a comment