வீட்டுச் சுவரை உடைத்துச்சென்ற கார்!

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (13) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு வளவிற்குள் புகுந்ததில் விபத்திற்குள்ளாகிய இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Batti 04

விபத்து இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டு வாசலில் நின்று கதைத்துக் கொண்டிருந்த இவரே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகிறனர்.

#SrilankaNews

Exit mobile version