தலைமன்னார் பிரதான வீதியில் இன்று (11) மாலை தலைமன்னார் ஸ்ரேடியம் சந்திப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான வாகனம், டிப்பர், முச்சக்கர வண்டி, துவிச்சக்கர வண்டி என வரிசையில் சமிஞ்சைக்காக காத்திருந்த வாகனங்களை வைத்தியசாலை வீதியூடாக ஸ்ரேடியம் நோக்கிப் பயணித்த பேருந்து மோதியுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேருந்து, வீதியில் சமிஞ்சைக்காக காத்திருந்த ஏனைய வாகனங்களை மோதியதில், முச்சக்கர வண்டி முற்று முழுதாக சேதமடைந்துள்ளது.
ஏனைய வாகன சாரதிகள் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய சாரதி அருகில் இருந்த வீதி ஒன்றில் பேருந்தை நிறுத்தி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து மன்னார் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews