வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
தந்தை தமது ஆடுகளை கொட்டகையில் கட்டிக்கொண்டிருந்தபோது, சிமெந்து கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டகையின் சுவருக்கருகில் ஒன்றரை வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.
இதன்போது ஆடு மிரண்டு கொட்டகையின் சுவர்களை இடித்தபோது, சுவர் இடிந்து ஒன்றரை வயது சிறுவனுக்கு மேல் விழுந்ததுள்ளது.
இதையடுத்து, சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே சிறுவன் உயிரிழந்துள்ளான் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் வவுனியா, பம்பைமடுவைச் சேர்ந்த சுஜந்தன் கிருசன் என்ற ஒன்றரை வயது சிறுவனே உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment