முஸ்லிம் மக்களுக்குத் தேவையான அரசியல் அபிலாஷைகள் வேறு விதமானவை. அதேபோல மலையகத்திலுள்ள மக்களின் அபிலாக்ஷைகள் வேறுவிதமானவை.
அதேபோல வடக்குக் கிழக்கில் வாழும் தழிம் மக்களின் அபிலாக்ஷைகள் வேறு விதமானவை.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (02) யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
ஏனெனில் அவர்களது தமது பூர்வீக நிலங்களில் நிரந்தரப் பிரஜைகளாக கௌரவமாக வாழக்கூடிய ஆட்சி நிலமையைத் தான் கோரிவருகிறார்கள்.
எங்களுடைய கொள்கைகளுக்குள் நில்லுங்கள் என்று நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. அதேபோல் அவர்கள் எங்களது தலைவிதியையும் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
#SrilankaNews