துயரக்கடலில் தொடர்ந்து தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்மீது தாங்கள் கொண்டுள்ள பாசத் துடிப்புக்கும் பரிவுக்கும் எமது மனங்கனிந்த நன்றிகள் என தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருமான ஸ்ரீகாந்தாவால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைத் தீவில் வாழ முடியாமல் இடம்பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தமிழ் உடன் பிறப்புக்களின் நல்வாழ்வுக்காய் தாங்கள் முன்னெடுத்திருக்கும் செயற்றிட்டங்களுக்கு எமது மக்களின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.
தங்கள் நற்பணிகள் அனைத்தும் வெற்றி பெற எங்கள் நல்வாழ்த்துக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews