பல்கலை மாணவர் பேரணி மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சால் பதற்றம்!

பல்கலை மாணவர் பேரணி மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சால் பதற்றம்

அரசுக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது நாடாளுமன்றத்துக்கு அருகில் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நுகேகொடையில் இருந்து இன்று மாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியிருந்தனர்.

இவர்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பயணித்த நிலையில், பத்தரமுல்லை பொல்துவ சந்திப்பகுதியில் வீதித் தடைகளைப் போட்டுப் பொலிஸார் மறித்தனர்.

இவ்வேளையில் வீதித் தடைகளையும் தள்ளி வீழ்த்திவிட்டு முன்னால் செல்ல முயன்றபோது மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதலை நடத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.

#SriLankaNews

Exit mobile version