Selvam
அரசியல்இலங்கைசெய்திகள்

கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே! – சுமந்திரனின் கருத்துக்கு ரெலோ பதில்

Share

“விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே. விடுதலைப்புலிகளை வன்முறையாளர்கள் போல் காட்டிக் கொள்ளும் சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கத் தகுதியுள்ளதா?”- இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி..

வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமடைவோம்” என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், சுமந்திரன் எம்.பியின் கருத்துக்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கம் விலகிச் சென்றால் தமிழரசுக் கட்சி சந்தோசப்படும் என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகி 10 வருடங்களின் பின்னரே சுமந்திரன் கட்சிக்குள் வந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ரெலோ முக்கிய பங்காற்றியிருந்தது. கிழக்கில் உள்ள தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் பலருக்கும் அது தெரியும்.

ஆயுதப் போராட்டத்தை வன்முறையென சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வன்முறையை ஏற்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சுமந்திரன் வன்முறை எனக் குறிப்பிடும் வே.பிரபாகரனின் ஆசீர்வாதத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டமைப்பில் சுமந்திரன் எப்படி அங்கம் வகிக்க முடியும்?

இதேவேளை, சுமந்திரனின் கருத்து தமிழரசுக் கட்சியின் கருத்தா என்பதை அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனின் கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தா என்பதை இரா.சம்பந்தனும் தெளிவுபடுத்த வேண்டும்.

போராட்டத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் ஒரு துளியளவு பங்களிப்பையும் செலுத்தாதவர் சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அனைவருக்கும் முன்பாகவே எமது முடிவை அறிவித்தோம். எமது முடிவு ஜனநாயக ரீதியிலானது என இரா.சம்பந்தனும் தெரிவித்திருந்தார்.

சுமந்திரன் பல தடவைகள் சீண்டியபோதும், நாம் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மௌனம் சாதித்தோம். இப்போது சுமந்திரன் சொன்ன கருத்து பாரதூரமானது. அதற்குப் பதிலடி கொடுப்போம்.

எம்மைத் துரோகிகள் போல் சுமந்திரன் பொய்யான கருத்தைத் தெரிவித்திருந்தார். நாம் துரோகிகளாக புலிகளால் பார்க்கப்பட்டிருந்தால், கூட்டமைப்பை உருவாக்கும் பணியை புலிகள் எம்மிடம் தந்திருக்க மாட்டார்கள்.

விடுதலைப்புலிகளும், ரெலோவும் எப்படி அன்னியோன்யமாக செயற்பட்டார்கள் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கும், விடுதலைப்புலிகளின் மூத்த போராளிகளுக்கும் நன்கு தெரியும். வவுனியாவில் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து செயற்படுவதாகக் கூறி, எமது உறுப்பினர்களும், அலுவலகங்களும் தாக்கப்பட்டிருந்தன.

எம்மையும் விடுதலைப்புலிகளையும் பற்றிப் பேசும் தகுதி சுமந்திரனுக்குக் கிடையாது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிஐடி தடுப்புக்காவலில் இருந்த கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக...

Untitled 35
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு கிணற்றுப் படுகொலைச் சம்பவங்கள்: பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கிணற்றுப் படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வறட்சி அதிகரிப்பு: இலங்கையில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை என எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...

Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...