நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
40 வயதுக்குட்பட்ட அனைத்து அரச ஊழியர்களும் விண்ணப்பங்களை நேரடியாக அனுப்பலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது உயர்தர வகுப்புகளுக்கான அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் காணப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்புக்கு மேலதிகமாக, எஞ்சியுள்ள மற்றும் உருவாகும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏனைய பட்டதாரிகளையும் இணைத்துக்கொள்ள மாகாண சபைகள் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment