tamilni 236 scaled
இலங்கைசெய்திகள்

உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது

Share

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான i மற்றும் ii வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியரை கைது செய்துள்ளது.

52 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்களை தனது வீட்டில் வைத்து அவரது சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் விவசாய விஞ்ஞானம் I வினாத்தாள் கேள்விகளை ஜனவரி 8 ஆம் திகதியும், விவசாய விஞ்ஞானம் II வினாத்தாள் கேள்விகளை 2024 ஜனவரி 10 ஆம் திகதியும் வெளியிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உயர்தரப் பரீட்சையில் விவசாய விஞ்ஞானப்பிரிவின் இரண்டாம் பகுதிக்கான விசேட பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...