‘எத்தனோல்’க்கு வரி அதிகரிப்பு

1668160407 baral tanki 2

எத்தனோல் இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காலத்தின் போது, ​​கிருமிநாசினி திரவ உற்பத்தியில் எத்தனோல் பயன்படுத்தப்பட்டதால் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.

இவ்வாறு வரியை மீண்டும் அதிகரிப்பதன் மூலம் 1.6 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்று காலத்தில் எத்தனோல் வரி 2020 ஏப்ரல் 30 மற்றும் 2020 ஜூன் 09 ஆகிய இரு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு லீற்றருக்கு 25 ரூபாவாக இருந்த வற் வரியை 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் 25 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், வாடிக்கையாளருக்கு பலன் கிடைக்காத காரணத்தினால், வரியை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version