பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட மூன்றாம்கட்ட உணவுப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
இதனடிப்படையில் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 22 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 100 மெட்ரிக் தொன் மருந்து பொருட்கள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
குறித்த பொருட்கள் இன்று அமைச்சர்கள் அலி சப்ரி மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியவர்களிடம் கையளிக்கப்பட்டள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#sriLankaNews