தமிழக மீனவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

500x300 1724009 ramadoss

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் உடன் விடுதலைசெய்யப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும்.

இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது.

கைது செய்யப்பட்ட மீனவர்களில் இதுவரை விடுதலை செய்யப்பட்ட 12 பேர் தவிர மீதமுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். – என்றுள்ளது.

#India

Exit mobile version