tamilni 134 scaled
இலங்கைசெய்திகள்

பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்

Share

பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்

பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முதல் பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றையதினம் (10.10.2023) முல்லைத்தீவில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இளைஞர்களுக்குரிய மதிப்பும், மரியாதையும் சரியாக கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இளைஞர்களின் போராட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்தமையாலே பேச்சுவார்த்தைக்கு பல நாடுகளுக்கு அழைத்தார்கள்.

ஆனால் அந்த இளைஞர்கள் ஒரே குறிக்கோளோடு எங்களுக்கு நியாயமான ஒரு தீர்வுக்காகத் தான் போராடினார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்காததனால் அந்த பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்பட்டன.

இலங்கை அரச படைகளால் விடுதலை புலிகளோடு போரிட முடியாது என்ற காரணத்தால் பல நாடுகள் சேர்ந்து இவர்களின் தியாகத்தை மௌனிக்கச் செய்து விட்டது. இருந்தாலும் இந்த உணர்வுகள் எம் மக்களிடத்தே அதிகமாக இருக்கி்றது.

இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தனியாக இந்த நினைவுகூரலை செய்த நிலையும் இருக்கின்றது.

எல்லோருக்கும் நினைவுகூர விருப்பம் இருக்கின்றது. ஆனால் முன்பு இருந்த அடக்குமுறைகள் மக்கள் மீது இப்போது திணிக்கப்படுகின்றது.

நிச்சயமாக புலனாய்வாளர்கள் என்ற பெயரிலும், பொலிஸ், இராணுவம் என ஏதோ ஒரு வகையில் பலருக்கும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

இதன் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதில்லையே தவிர இவர்களின் நினைவோடு தான் பயணிக்கிறார்கள். திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்திலே பல இடங்களில் நடந்தது. அவர்களை எண்ணிப்பார்த்தால் பெரிய கூட்டமாகத்தான் இருக்கும்.

மாலதி முதலாவது பெண் மாவீரர். இவர் மரணித்த நாளை நினைவு நாளாக நினைவு கூருகின்றோம்.

பெண்களில் தலைசிறந்த வீராங்கனையாக, அரசியல் துறையிலே தலை நிமிர்ந்து பயணிக்க கூடியவர்களாக, போராட்டக்களத்திலே துணிந்து பயணிக்க கூடியவர்களாக, பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முதல் பெண் மாவீரர் 36 ஆண்டுகளாக நினைவு கூரப்படுகின்றது.

விடுதலைபுலிகளின் தியாகத்தை நாம் மறக்கவில்லை. என்றோ ஒரு நாள் மாவீரர்களின் கனவுகள் நிறைவேறும். அந்நாளில் தனித் தமிழ் ஈழத்தில் நாங்கள் செயற்படும் நிலை ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...