13 தங்கப்பதக்கங்களை வென்ற தமிழ் மாணவி: கூட்டமைப்பு பாராட்டு!

Thanikasalam tharsika

கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றை சேர்ந்த தமிழ் மாணவியான தணிகாசலம் தர்ஷிகா தேசிய ரீதியில் மருத்துவதுறையில் அதிக தங்கப்பதக்கங்களைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் கொழும்பு பல்கலைக்கழக மாணவி. மருத்துவத்துறை இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று தேசிய ரீதியான சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.

குறித்த மாணவியின் வீட்டிற்கு இன்று (27) சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோர் பாராட்டி கௌரவித்தனர்.

இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் ஜெயசிறில், தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version