அவுஸ்திரேலியா- மெல்போனில் தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தமிழ் ஏதிலிகள் கழகமானது தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய மெல்போன் ஹாம்ப்டன் பார்க்கைச் (Hampton Park) சேர்ந்த ரமணன் ராஜ்குமார் என்ற தமிழ் ஏதிலி கடந்த 14 ஆம் திகதியன்று உறக்கத்திற்குச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக ஏனைய விடயங்கள் உறுதியாகத் தெரியவில்லை என்று தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த தமிழ் அகதி உயிரிழந்துள்ள நிலையில், இறுதி நிகழ்வுகளை நடாத்துவதற்கான நிதிசேகரிப்பில் தமிழ் ஏதிலிகள் கழகம் ஈடுபட்டுள்ளது எனவும் அரன் மயில்வாகனம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த சில மாதங்களில் தஞ்சம்கோரி அவுஸ்திரேலியா சென்றவர்கள் பல்வேறுபட்ட காரணங்கள் உயிரிழப்பானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அவுஸ்திரேலிய அரசின் கடும்போக்கு மற்றும் இறுக்கமான கொள்கைகளே பிரதான காரணம் என்றும் தமிழ் ஏதிலிகள் கழகம் சாடியுள்ளது.
#SrilankaNews
Leave a comment