கிளிநொச்சியை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் சிறுகதை போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலக கலாசார திணைக்கள சிறுகதை போட்டியில் 16 வருடமாக மகசீன் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வரும் கிளிநொச்சி விவேகானந்த நகரைச்சேர்ந்த செல்லையா சதீஸ்குமார் என்ற தமிழ் அரசியல் கைதியே முதலிடம் பெற்றுள்ளார்.
இவருக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (24) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடந்த திருவள்ளுவர் விழாவில் வழங்கப்பட்டது.
பரிசிலை அவர் சார்பாக அவரது தாயார் செல்லையா மகேஸ்வரி பெற்றுக்கொண்டார்.
இதன்போது கருத்த தெரிவித்த அவரது தாயார்,
இப்படியான வெற்றிதான் மகனை சந்தோசப்படுத்துவதாகவும் தன்னுடைய. மகனையும் இந்நாட்டின் பிரஜையாக கருதி ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
#SrilankaNews

