பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரது, வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்துவந்த நிலையில் இன்று (02) காலை உயிரிழந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்படுள்ளது.
அவரது குடும்பத்தினர், புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.
அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
#SrilankaNews

