செந்தில் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக அரசு

tamilni 255

செந்தில் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக அரசு

அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய ஏற்பாட்டில், 2024ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் கலை, கலாச்சாரத்தை எடுத்துரைத்த குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்ட செந்தில் தொண்டமானுக்கு தமிழக அரசு நன்றிகளை தெரிவித்துள்ளது.

மேலும், அயலக தமிழர் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்று நிகழ்வை கௌரவப்படுத்தியமை மகிழ்ச்சி அளிப்பதாகவும், எதிர்கால நிகழ்வுகளுக்கும் தங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version