இலங்கை செல்ல தமிழக அரசு உதவ வேண்டும்!

1790969 santhand

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி உட்பட 6 பேர் விடுதலையாகியுள்ளனர்.

இந்த நிலையில், வேலூர் ஜெயிலில் இருந்துவெளியே வந்த பிறகு தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல உள்ளதாக சாந்தன் தெரிவித்துள்ளார். தனது பாஸ்போர்ட் காலாவதியாகியுள்ள நிலையில், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி (வயது 75) மகன் விடுதலை தொடர்பில்,

30 ஆண்டுகளாக பிரிந்து இருந்த எனது மகனை தற்போது மத்திய அரசு விடுதலை செய்து அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இதற்காக பாடுபட்டு அத்தனை காலம் உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வளவு பேரும் சேர்ந்து தான் எனது பிள்ளையின் விடுதலைக்கு வழி செய்திருக்கிறீர்கள். தமிழக அரசுக்கும் மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

நாங்கள் எப்போதும் இந்த நன்றியை மறக்க மாட்டோம். எனக்குத்தான் இந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இருந்தாலும் நலமாக உள்ளேன். எனது பிள்ளை என்னோடு வந்து சேர்ந்துவிடுவான் என உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

#India

Exit mobile version