13 16
இலங்கைசெய்திகள்

அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் : தொடரும் சர்ச்சை

Share

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட மாணவி விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) அளித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23 ஆம் திகதியன்று மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்தநிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சம்பவம் தொடர்பிலான எஃப்ஐஆர் சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தின.

இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் எஃப்ஐஆர் வெளியானது குறித்து மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமனம் செய்த உத்தரவிட்டனர்.

அத்தோடு, அரசு அனுமதியின்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை காவல்துறை ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், காவல்துறை ஆணையருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கைகள் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...