24 6663e58cbc2c3
இலங்கைசெய்திகள்

அங்கீகரிக்கபடாத நாடுகளின் மகளிர் உலகக்கிண்ணப் இறுதியாட்டத்தில் தமிழீழ மகளிர் அணி

Share

அங்கீகரிக்கபடாத நாடுகளின் மகளிர் உலகக்கிண்ணப் இறுதியாட்டத்தில் தமிழீழ மகளிர் அணி

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெறும் CONIFA மகளிர் உலகக்கிண்ண.இறுதியாட்டத்திற்கு தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி தெரிவாகியுள்ளது.

குறித்த போட்டியானது இன்று (08.06.2024) ஐரோப்பாவின் கலாசார தலைநகரான நோர்வே போடோவில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் தமிழீழ அணியை எதிர்த்து சப்மி நாட்டு அணி மோதவுள்ளது.

CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024ஆனது பெண் சமுதாயத்தில் புதிய முன்மாதிரிகளையும் நட்சத்திரங்களையும் உருவாக்குவதற்கும் அமைதி, நட்புடன் கூடிய உலகை கொண்டாடுவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருந்துள்ளது.

இந்நிலையில் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தமிழீழப் பெண் போராளிகளின் மகளிர் அணிக்கு கி்டைத்துள்ளது.

குறித்த அணியில் ஐரோப்பாவின் பல நாடுகள் கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இருக்கின்ற திறமையான தமிழீழ இளம் தலைமுறை உதைபந்தாட்ட வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள்.

அந்தவகையில் தமிழீழப் பெண் போராளிகளின் வியக்கத்தக்க சாதனைகளை தமிழீழ மண் கண்டுள்ளது. அந்த விழுமியங்களைக் காவியபடி உலகத் தமிழீழ பெண்கள் சாதனைகள் வரலாறு படைக்க வேண்டும்.

மாலைதீவுடன் இணக்கம் வெளியிட்டுள்ள இலங்கை

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....