காணி ஒன்றிலிருந்து பொலிஸாரால் வாள்கள் மற்றும் கோடரிகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு 9.30 மணியளவில் பொலிஸார் நடத்திய தேடுதலில் குறித்த காணியில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களே மீட்கப்பட்டுள்ளன.
2 கஜேந்திர கோடரிகள் மற்றும் நீளமான வாள் ஒன்று ஆகியவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment