யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர். குறியீடு இல்லாமல் எரிபொருள் நிரப்ப முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், கையில் பலத்த காயங்களுக்குள்ளான ஊழியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (16) இரவு 11:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment