அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு பாகிஸ்தானுக்கு சென்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
கல்முனை நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று கண்டன பேரணி ஒன்று இடம்பெற்றது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸிடம் இப்பேரணியில் கலந்து கொண்டவர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
கடந்த 13 வருடங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் காணாமலாக்கப்பட்ட உறவுகள் சார்ந்து எவ்வித தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை என்பதை அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment